2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - மிதுனம்

2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - மிதுனம்

துணிச்சலுடன் எதையும் செய்து பலன் பெறும் மிதுன ராசி வாசகர்களே!
 
இந்த வரும் 01-05-2024 குரு பெயர்ச்சி இதுவரை லாபஸ்தானத்தில் இருந்து வந்த குரு பகவான் இனி விரையஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் பாதகாதிபதி மறைவு பெறுவதும் நன்மையை தரும்.
 
விரையாதிபதி வீட்டில் குரு அமர்ந்து உங்களின் சுகஸ்தானத்தையும், சத்ரு ஸ்தானத்தையும், அட்டமஸ்தானத்தையும் பார்ப்பதும் நற்பலன்களை தரும். சுகஸ்தானத்தை பார்ப்பதால் உங்களின் வாகனத்தை மாற்றி புதிய வாகனத்தை வாங்குவீர்கள். 
 
வீடு கட்டும் யோசனை மூலம் புதிய வீட்டு மனை வாங்குதல், வங்கி மூலம் கடன் பெற்று வீடு கட்டுதல், கட்டிய மனையை வாங்குதல் போன்ற சூழ்நிலைகள் உருவாகும். உங்களின் தங்க நகைகள் அடவு வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உடல் நலனில் கவனம் செலுத்தி சரி செய்து கொள்வீர்கள்.
 
கடன் பட்டாலும் விரைவில் அடைக்கும் சூழ்நிலையை குரு தருவார். சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் உண்டாகலாம். சிலருக்கு இருக்கும் இடத்தில் வேறு பணிக்கு மாற்றலாகி செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். எதிலும் உங்களின் செல்வாக்குக்கு ஒரு குறையும் வராமல் பார்த்து கொள்வீர்கள்.
 
அட்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பலரின் கவனம் உங்கள் மீது இருக்கும். சரியான நேரத்தில் எதையும் செய்து முடித்து விடும் உங்களின் திறமையை கண்டு வியப்பார்கள். பல காலம் உங்களை பகையாக நினைத்த நிலை மாறி உறவு கொள்வார்கள். புதிய முயற்சிகளுக்கு சிலரின் உதவியுடன் நன்மை பெறுவீர்கள்.
 
பெண்களுக்கு திருமணம் அமையும். மறுமணம் செய்ய இந்த காலம் உதவியாக அமையும். வெளிநாடு தொடர்புகள் நல்ல பலனைத் தரும். கருத்து ஒற்றுமையும், காரிய அனுகூலம் உண்டாகும். பொருளாதாரம் சிறக்கும்.

பரிகாரம்:
 
வியாழக்கிழமை தோறும் தொடர்ந்து கொண்டை கடலை மாலை அணிவித்து நெய் தீபம் ஒன்று ஏற்றி, வணங்கி வர நினைத்த காரியம் விரைவில் நடந்து நலம் பெறுவீர்கள்.